Spotlightசினிமா

ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிய துருவ் விக்ரம்!

விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் துருவ் விக்ரம் சில தினங்களுக்கு முன்பு சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். மாணவிகள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய அவர், நிகழ்ச்சியில் ஒரு பாடலும் பாடி அசத்தினார்.

நிகழ்ச்சியில் ஆதித்ய வர்மா படத்தின் டீசர் திரையிடப்பட்டது. அவ்வேளையில் மாணவிகள் சந்தோசக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Facebook Comments

Related Articles

Back to top button