Spotlightவிமர்சனங்கள்

தரமான தடயவியல்… V1 Murder Case விமர்சனம் 3.5/5

படத்தின் ஆரம்பமே கொலையில் தான் தொடங்குகிறது,

‘V1’ என்ற ஒரு வீட்டில் நடக்கும் கொலை என்பதால் இந்த படத்திற்கு அதையே தலைப்பாக வைத்துள்ளார் டைரக்டர்.

அந்த வி1 வீட்டில் லிஜேஷ் & காயத்ரி திருமணம் செய்துக் கொள்ளாமல் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இது காயத்ரியின் டாக்டர் அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எவ்வளவு சொல்லியும் பெற்றோரை உதறிவிட்டு லிஜேஷ் உடன் வாழ்கிறார்.

இவர்களுக்குள் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் நடக்குகிறது. ஒரு நாள் சண்டை அதிகமாகவே அன்றைய தினம் வேலைக்கு சென்று விட்டு இரவில் லேட்டாக தனியாக வருகிறார் காயத்ரி.

அப்போது அவரை பின் தொடரும் ஒரு உருவம் அவரை கழுத்தில் குத்தி கொலை செய்துவிடுகிறது.

அந்த சமயத்தில் பெய்த மழையால் கொலை குற்றவாளியின் தடயங்கள் அழிந்து போகிறது.

இதனை விசாரிக்க தடயவியல் (FORENSIC) துறை போலீஸ் அதிகாரியான ராம் அருண் கேஸ்ட்ரோ மற்றொரு அதிகாரியான விஷ்னுப்ரியாவுடன் வருகிறார்.

கொலையாளி யார்? அவரின் நோக்கம் என்ன? எப்படி குற்றவாளியை கண்டு பிடித்தார்கள்? என்பதை மீதிக்கதை.

புதுமுக நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்துள்ளார். நல்ல உயரம் நல்ல வெயிட் என கானும்போதே மிரள வைக்கிறார்.

தடயவியல் துறை என்பது போலீஸ் துறையில் ஒரு பிரிவு என்பதை அழகாக காட்சிகளாக காட்டியுள்ளனர்.

ஹீரோ கேஸ்ட்ரோ தன் கேரக்டரை அலட்டிக்கொள்ளாமல் கெத்தாக கொடுத்திருக்கிறார்.

இவருக்கு இருட்டு என்றால் பயம் என்பதால் அதற்கேற்ப சில காட்சிகளையும் வைத்துள்ளனர்.

இந்த துறையில் போலீஸ் யூனிபார்ம் இல்லை என்பதால் ஹீரோ அண்ட் ஹீரோயின் கலர்புல்லாக வருகிறார்கள். அதிலும் நாயகியின் உடைகள் நச்.

அழகான உதடுகள்.. நேர் கொண்ட பார்வை… என அசத்தியிருக்கிறார் நாயகி விஷ்னுபிரியா பிள்ளை. இவரும் கேரள நாட்டை சேர்ந்தவர் தான்.

காயத்ரியின் மற்றும் அவரின் லிவிங் டுகெதர் காதலன் லிஜேஷ் இருவரும் நல்ல தேர்வு.

காயத்ரியை காதலிக்கும் லிங்கா, காயத்ரியின் பெற்றோர், போலீஸ் அதிகாரிகள் டீம் என அனைவரும் நல்ல தேர்வு.

கிருஷ்ணசங்கர் டி.எஸ் அவர்களின் ஒளிப்பதிவும் ரோனி ரெபேலின் பின்னணி இசையும் படத்தின் கதையோட்டத்திற்கு அச்சாணியாக இருந்துள்ளது.

சி.எஸ்.பிரேம்குமாரின் எடிட்டிங் பணிகள் கச்சிதம். படத்தை 110 நிமிடங்களில் முடித்துவிட்டார்.

’மெட்ராஸ்’, ராட்சசன் ‘வட சென்னை’ உள்ளிட்ட படங்களில் நம்மை நடிகராக கவர்ந்தவர் தான் இப்பட இயக்குனர் பாவெல் நவகீதன். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

படம் முழுவதும் நிறைய ட்விஸ்ட்டுகள் கொடுத்துள்ளார். யார் குற்றவாளி அவரா? இவரா? என ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்து படத்தை ஓட்டியிருக்கிறார்.

சில காட்சிகள் அட போதும்ய்யா யார்ன்னு காட்டுங்க என்று சொல்ல வைக்கிறது.

இவையில்லாமல் இன்றும் நிறைய குடும்பங்களின் கௌரவ கொலைகளை சாடியிருக்கிறார் இயக்குனர் பாவெல் நவகீதன்.

க்ரைம் த்ரில்லர் கதையாக இல்லாமல் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வையும் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘V1’ தரமான தடயவியல் படம்.

V1 Murder case review rating

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close