
ஹிந்தியில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் ‘அந்தாதுன்’. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் கைப்பற்றியிருந்தார்.
இப்படத்தை இயக்குன ர் ஜேஜே பெட்ரிக் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. படத்திற்கு அந்தகன் என டைட்டிலும் வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இப்படத்தினை பெட்ரிக் இயக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தகன் படத்தை தியாகராஜனே இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஸ்டார் மூவிஸ்” தயாரிப்பில் பிரஷாந்த் நடிக்க உருவாக இருக்கிறது இப்படம்.
சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா,
வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார், மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
ஒளிப்பதிவு -ரவியாதவ் DFT
கலை: செந்தில் ராகவன்
Facebook Comments