
சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளது “மகான்”. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 26ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகரக்ளை தன்னகத்தே வைத்திருப்பதவர் சீயான் விக்ரம். நடிப்பு அசுரன் என பலரால் கொண்டாடப்படும் சீயான் விக்ரமின் படங்களை திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடுவார்கள் அவரது ரசிகர்கள்.
இப்படி திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு மாபெரும் கலைஞனின் படம் ஓடிடி’யில் வெளியாவதை அவரது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “மகான்” படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலர் கோரிக்கைகள் வைத்த வண்னம் உள்ளனர்.
சீயான் விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் விக்ரமிற்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்து வருகிறது.
முதன்முதலாக இருவரும் சேர்ந்து நடித்த படம் திரையரங்கில் வந்தால் தானே கொண்டாட்டம் கலைகட்டும் தயாரிப்பாளரே..??





