இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண்டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ” ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,’வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.
விழாவில் பேசிய S .A சந்திரசேகர் , ” இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார்.
ஜெயசித்ரா அவர்கள் பேடும்போது ” படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர்.
இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் .தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என பேசினார்.