விமர்சனங்கள்

அனுக்கிரகன் – விமர்சனம்

இயக்கம்: திரு. சுந்தர் கிருஷ்

நடிகர்கள்: விஜய் கிருஷ்ணா, முரளி ராதாகிருஷ்ணன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், தீபா உமாபதி, ராகவன் முருகன், ஹேமன் முருகானந்தம் , நிஷால் சுந்தர், கிஷோர் ராஜ்குமார், பாரிவாசன்

இசை : திரு. ரேஹான்

ஒளிப்பதிவாளர் : திரு. வினோத் காந்தி

தயாரிப்பாளர் : திரு. முருகானந்தம் வீரராகவன் , திருமதி. சண்முகப்ரியா முருகானந்தம்

கதைப்படி,

சிறுவன் ராகவன் முருகன் தனது தந்தை விஜயகிருஷ்ணன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். தந்தையும் மகன் மீது அளவு கடந்த அன்பும் வைத்திருக்கிறார். தன் தந்தை அவரது மாணவப் பருவத்தில் மற்றும் இளமைப் பருவத்தில் செய்த நிறைய தியாகங்களை ராகவன் முருகன் அறிந்து கொள்கிறார்.

அவர் காலத்தில் அவருக்கு கிடைக்காத அனைத்தையும் தனது தந்தைக்கு செய்ய எண்ணுகிறார் மகன் ராகவன் முருகன். இதனைத் தொடர்ந்து தனது விருப்பங்களை இறைவனிடம் எடுத்து வைக்க, இறைவன் அவரது விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.

தனது தந்தை வாழ்ந்த சிறு வயது காலத்திற்கு காலப் பயணம், செய்து அங்கு பயணித்து விடுகிறார் மகன் ராகவன் முருகன். தந்தையும் மகனும் தற்போது ஒரே வயதில் பயணிக்கின்றனர்.

இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறுகின்றனர். தனது தந்தை சிறுவயதில் ஆசைப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார் மகன் ராகவன் முருகன். தொடர்ந்து வருடங்கள் உருண்டோட இருவரும் நெருங்கிய நண்பர்களாக தொடர்கின்றனர். இறுதியில் தந்தையின் கனவு அனைத்தையும் மகன் நிறைவேற்றி விட்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை

ராகவன் முருகன் தனது சிறுவயது கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்து இருக்கிறார். இவரது வளர்ந்த பருவமான கதாபாத்திரத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் தந்தை சந்தோஷ் கதாபாத்திரத்தில் விஜய கிருஷ்ணா என இவர்கள் அனைவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இறைவனாக வந்த ஹேமன் முருகானந்தம் மற்றும் சந்தோஷின் மனைவியாக வந்திருந்த ஸ்மிருதி ராமகிருஷ்ணன், கீதா கதாபாத்திரத்தில் நடித்த தீபா உமாபதி உள்ளிட்ட அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்டதை மிக அழகாக செய்து முடித்திருந்தனர்.

கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்களது நடிப்பை மிகவும் கச்சிதமாக கொடுத்திருந்தனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பலமாக இருந்தது. மேலும் ஒளிப்பதிவும் வெளிச்சத்தை தேவையான அளவிற்கு கொடுத்து படத்தினை கலர்ஃபுல்லாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி

வித்தியாசமான கண்ணோட்டத்தில் அனைவரும் தங்களது சிறுவயது காலகட்டத்திற்கு சென்று ஒரு முறை பயணிக்க வைக்கும் ஒரு அறிய முயற்சியாக, மிகவும் நெகிழ்ச்சியான ஒரு கதை, திரைக்கதையை கையில் எடுத்து இயக்குனர் சுந்தர் கிருஷ் அதை தெளிவான நடையோடு இயக்கியிருக்கிறார்.

படம் பார்க்கும் அனைவருக்கும் தங்களது இளம் வயது நினைவுகளை மீண்டும் கண்முன்னே பார்த்த உணர்வை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். தங்களது இன்ப துன்பங்களை இழந்த அனைத்து தந்தைகளுமே இப்படத்தை அதிகமாகவே விரும்புவார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button