
சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. ‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ‘அரசன்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்டபடி எவ்விதத் தொய்வும் இன்றி படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் இந்த மூவரின் கூட்டணி, ‘அரசன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் TR உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் கூட்டணி என்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் மூவரும் இணைந்து கலந்துரையாடியிருப்பது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலம்பரசன் TR மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’, ‘வடசென்னை’ உலகத்துடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாகவும், அனிருத்தின் இசை காரணமாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





