Spotlightசினிமா

‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’…..படத்தலைப்பில் ரசிகர்களை கவர்ந்த படக்குழு!!

ராஜதந்திரம் படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வீரா. இவர் தற்போது நடித்து வரும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து , வெளிவரும் தருவாயில் உள்ளது.

அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், ஆரா சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அதர்வா =ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் “100” படத்தையும், ஆதி நடிப்பில் ஆர் எக்ஸ் 100 என்கிற திரைபடத்தையும் இதே நிறுவனத்தார் தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரா கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் குக்கூ பட நாயகி மாளவிகா நாயர். பல்வேறு படங்களை நிராகரித்து வந்த மாளவிகா இந்த கதையை கேட்ட மாத்திரத்தில் ஒப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா, ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், madly ப்ளூஸ் இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரவீன் ஆன்டனி படத்தொகுப்பில், டான் அசோக் வசனத்தில், எட்வர்ட் கலைமணி கலை வண்ணத்தில், விக்னேஷ் சிவன், விவேக், முத்தமிழ் ஆகியோரின் பாடல்கள் இயற்ற, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளிக்க, தஸ்தா நடனம் அமைக்கிறார்.

” அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” ரசிகர்களை கட்டிப்போட்டு கவர்ந்து இழுக்கும் படமாகும். மிக சிறந்த நடிகர், நடிகையர், திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என்கிற கலவையுடன் வெளிவர இருக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளிவர உள்ளது.

படத்தின் தரத்தை பற்றி கேள்விப்பட்ட clap போர்டு productions நிறுவனத்தை சார்ந்த சத்தியமூர்த்தி உடனே இந்த படத்தின் திரைஅரங்கு விநியோக உரிமையை பெற்று உள்ளார். அவருக்கு என் நன்றியை உரிதாக்குகிறேன். இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம் ” என நம்பிக்கையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால்

Facebook Comments

Related Articles

Back to top button