Uncategorized

புக்கிங்கில் அதிரடி காட்டும் ”கங்குவா”… திருவிழாவிற்கு தயாராகும் ரசிகர்கள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா.

இதுவரை தமிழ் சினிமாவில் செய்யாத அளவிற்கு படத்திற்கு ப்ரொமோஷன் செய்யப்பட்டு வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், படத்தின் டிக்கெட் புக்கிங் திறக்கப்பட்டுள்ளது. புக்கிங் திறக்கப்பட்ட சில மணித்துளிகளிலே ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

தமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் டிக்கெட் புக்கிங் படு வேகத்தில் புக்கிங் ஆகிக் கொண்டிருக்கிறது. இதனால், படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

இந்நிலையில், படம் வெளியாகும் வியாழன் அன்று திரையரங்குகளை திருவிழாவாக மாற்ற சூர்யா ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button