
உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பிரதமர் நிவாரண தொகை வழங்குங்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள இவ்வேளையில், பலரும் நிவாரண தொகை யை அளித்து வருகின்றனர்.
கரோனா ஒழிப்பு பணிகளுக்காக விப்ரோ குழுமம் 1125 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் விப்ரோ நிறுவனம் 100 கோடி ரூபாயும், விப்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனம் 25 கோடி ரூபாயும் அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் 1000 கோடி ரூபாயும் என மொத்தமாக 1125 கோடி ரூபாய் செலவிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Facebook Comments