Spotlightவிமர்சனங்கள்

Bachelor Movie Review 3.5/5

 

ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் திவ்யா பாரதி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் “பேச்சிலர்”. இப்படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் வெற்றி படங்களின் தயாரிப்பாளர் டில்லி பாபு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

கதைப்படி,

கோயம்புத்தூர் நாயகன் டார்லிங் (ஜி வி பிரகாஷ்), பெங்களூரில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனது நண்பர்களுடன் தங்கி இருக்கிறார் ஜிவி.

எது நடந்தா நமக்கென்ன என்ற மனநிலையில் சுற்றித்திரியும் ஒரு ஜீவன் தான் டார்லிங். உடன் பணிபுரியும் நண்பன் ஒருவர், தனது காதலியுடன் தனி ப்ளாட்டில் தங்கி இருக்கிறார். காதலியின் தோழியாக வருபவர் நாயகி (சுப்பு) திவ்யா பாரதி .

அப்படி இப்படியுமாக கூறி தனது நண்பனுடன் அதே ப்ளாட்டிற்கு குடியேறுகிறார் ஜி வி. காரணம் திவ்யா பாரதியும் அதே ப்ளாட்டில் வேறொரு அறையில் இருக்கிறார். நண்பனும் அவரது காதலியும் வெளிநாடு செல்ல, ஜிவியும் திவ்யாவும் அந்த வீட்டில் தங்குகிற சூழல் உருவாகி விடுகிறது. ஒருநாள் இருவரும் நெருக்கமாக இருந்துவிட, திவ்யா கர்ப்பமாகிறார்.

கர்ப்பத்தை கலைக்கச் சொல்கிறார் ஜிவி. முடியாது என திவ்யா அடம் பிடிக்கிறார். சென்னையில் மிகப்பெரும் வக்கீலாக இருக்கும் திவ்யாவின் அக்கா கணவர், ஜிவி மேல் வழக்கு தொடுக்கிறார்.

அதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஜி வி பிரகாஷ், மிகவும் எதார்த்தமான நடிப்பை மிகவும் கச்சிதமாக கொடுத்து டார்லிங்க் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாத ஒரு கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார் ஜி வி. அதிகப்படியான வசனங்கள், டயலாக்குகள் எதுவும் இன்றி தனது முக பாவனையிலே பல விஷயங்களை சொல்லிவிட்டு செல்கிறார் ஜிவி. அதிலும், மிஷ்கினுடனான காட்சிகள், டாக்டருடனான காட்சிகள் என பல இடங்களில் பக்காவா ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகி திவ்யா பாரதி, அழகான தேவதையாக வருகிறார். ஒரு அறிமுக படம் என்பது போல் அல்லாமல், ஒரு அனுபவ நடிகையின் நடிப்பை கொடுத்து அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களால் பல அர்த்தங்கள் பேசுகிறார்..தமிழ் சினிமாவுக்கு அழகான புதுவரவு நம்ம தமிழ் பொண்ணு திவ்யா பாரதி.

இயக்குனர் மிஷ்கின் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடித்திருக்கிறார். இதுவரை யாரும் ஏற்றிடாத வலுவான கதாபாத்திரம் தான். தனக்கேன உரித்தான் ஒரு உடல்மொழியில் நடித்திருக்கிறார்.

பகவதி பெருமாள், முனிஷ்காந்த், மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் படத்திற்கு சரியான தேர்வு. இவர்கள் டைமிங்கில் அடிக்கும் காமெடிகள் அனைத்தும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. படத்தின் ஆரம்ப காட்சிகள், மிஷ்கின், டாக்டர் காட்சிகள் என பல இடங்களில் இயக்குனர் தனது திறமையை நிருபித்திருக்கிறார். நேர்த்தியான கதை நகர்வு, அழகான காட்சியமைப்பு அனைத்தும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

தேனி ஈஸ்வரினின் ஒளிப்பதிவு மிகப்பெரும் பலம். ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்துவிட்டார்.

சித்து குமார், திபு நினன் தாமஸ், காஷிப் இவர்களின் பாடல் அனைத்தும் ர்சிக்கும் படியாக இருந்தது. அதிலும், பச்சிகளாம் மற்றும் கவன் பாடல்கள் ரிப்பீட் மோட்.

சித்துகுமாரின் பின்னனி இசை அப்ளாஷ். சான் லோகேஷின் படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தாலும், இன்னும் சற்று கத்தியை போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

18+ படமாக இருந்தாலும், குடும்பத்தோடு நிச்சயம் பார்க்கும் படமாக வந்துள்ளது.

இயக்குனர் சதீஷ் செல்வகுமார், தமிழ் சினிமாவிற்கான கச்சிதமான மேக்கர் கிடைச்சிருக்கார்… வாழ்த்துகள் இயக்குனரே.

பேச்சிலர் – கச்சிதம்..

Facebook Comments

Related Articles

Back to top button