Spotlightவிமர்சனங்கள்

பிஸ்கோத் விமர்சனம் 3.25/5

ஆர் கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் ‘பிஸ்கோத்’. தீபாவளி விருந்தாக் திரைக்கு வந்திருக்கிறது.

ஆடுகளம் நரேன் மற்றும் ஆனந்தராஜ் இருவரும் நண்பர்கள். சிறிய பிஸ்கட் கம்பெனி நடத்தி வருகிறார்கள். ஆடுகளம் நரேனின் மகன் சந்தானம். சந்தானம் சிறுவயதாக இருக்கும் போதே ஆடுகளம் நரேன் இறந்துவிடுகிறார்.

பின், பிஸ்கட் கம்பெனியை பெரிதாக டெவலப் செய்கிறார் ஆனந்தராஜ். அந்த கம்பெனியில் லேபராக பணி புரிகிறார் சந்தானம்.

தன் தந்தை ஆசைப்படி, பிஸ்கட் கம்பெனிக்கு முதலாளியாக ஆக முடியவில்லையே என ஏங்கி கொண்டிருக்கும் சந்தானத்திற்கு சவுகார் ஜானகியின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் கூறும் மன்னர் கால கதைகள் சந்தானத்தின் தற்போதைய வாழ்க்கையை போல் உள்ளது. அதன் பிறகு சந்தானத்தின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே படத்தின் மீதிக் கதை.

சந்தானம், வழக்கமான வெற்றி பெற தேவையான நடிப்பை கச்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறார். டைமிங் காமெடிகள், காதல், எமோஷன், ஆக்‌ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கதைக்கு ஏற்ற நாயகனாக சந்தானம் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஒரு சில இடங்களில் அவர் அடிக்கும் டைமிங் காமெடிகள், சிரிப்பலையில் திரையரங்குகள் அதிர்கின்றன.

நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா இருவரும் அழகிலும் நடிப்பிலும் சூப்பர்.

காமெடியனாக மட்டுமல்லாமல் அவ்வப்போது சீரியசான முகத்தையும் காட்டியுள்ளார் ஆனந்தராஜ்.

சவுகார் ஜானகி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் ஆகியோரின் நடிப்பும் அருமை.. கதாபாத்திரங்களும் சரியான தேர்வு தான்.

சிறிய கதையாக இருந்தாலும், அதை நேர்த்தியாக நகர்த்தி தனது இயக்கத்தில் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

பரதனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னனி இசை அருமை.

சண்முக சுந்தரம் அவர்களின் ஒளிப்பதிவு கலர் ஃபுல்.

பிஸ்கோத் – கொரோனாவிற்கு பிறகு மக்களை மீண்டும் திரைக்கு கொண்டு வர தேவையான படையல் தான்…

சூப்பர் டேஸ்ட்ப்பா…

Facebook Comments

Related Articles

Back to top button