
நடிகையும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பாளருமானவர் ஸ்ரீப்ரியா.
இவரது தாயார் கிரிஜா பக்கிரிசாமி வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 81. வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
கிரிஜாவின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளது.
புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரிசாமியின் மனைவியான, கிரிஜா ‘காதோடு தான் நான் பேசுவேன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதைப்போல, நீயா, நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments