
இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளிவந்த திரைப்படம் தான் “தண்டட்டி”.
தென் மாவட்ட கிராமத்து மக்களின் வாழ்வியலை, காதல், காமெடி, பாசம், வெகுளித்தனம் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக வெளிவந்திருக்கும் இப்படத்தில், தண்டட்டிக்குள் ஒளிந்திருக்கும் ஒரு காதலையும் கூறியிருக்கிறார்.
படத்தின் விமர்சனத்தைக் கண்டு, குடும்பத்தோடு பலரும் இப்படத்தை திரையரங்குகளில் கண்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், படத்தினை பார்த்த ரசிகர்கள் பலர் க்ளைமாக்ஸ் காட்சியைக் கண்டு கண்கலங்கி நின்றதை கண்முன்னே காண முடிகிறது.
இப்படியொரு நெஞ்சம் தொட்ட காதல் கதையைக் கண்டு பல வருடங்கள் ஆகிறது என்று ரசிகர்கள் கூறிச் சென்றதையும் காண முடிந்தது.
கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்தது.
இந்த வாரம் வெளியான படங்களிலே குடும்ப சகிதமாக சென்று பார்க்கும்படியாக வெளியானது “தண்டட்டி” மட்டுமே என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.