Spotlightவிமர்சனங்கள்

“Blood Money” Movie Review 3/5

மா, லெட்சுமி உள்ளிட்ட குறும்படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய இயக்குனர் சர்ஜுன். இவரது இயக்கத்தில், ப்ரியா பவானி சங்கர், கிஷோர், சிரிஷ் , பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் நடிக்க உருவாகியிருக்கிறது “ப்ளட் மணி”.

‘பிளட் மணி’ டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

கதைப்படி,

ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியில், உயர் பதவி கிடைத்து அன்று பணிக்கு செல்கிறார் ப்ரியா பவானி சங்கர். இவருடன் உடன் பணிபுரிபவராக வருகிறார் சிரிஷ். ப்ரியா முதல்நாளே, கண்ணீரை சிந்த வைக்கும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் காண்கிறார். அந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து செய்தியாக வெளியிடுவோம் என்கிறார் ப்ரியா.

தனது இரு மகன்களை நாளை குவைத் அரசாங்கம் தூக்கிலிடப்போவதாகவும், இதுவரை அப்பா முகத்தையே காணாத பேத்தி இங்கு துடிப்பதாகவும் தஞ்சையில் இருந்து ஒரு தாயார் பேசும் வீடியோ அது.

குவைத்திற்கு பணிக்காக சென்ற கிஷோரும் அவரது தம்பியும், செய்யாத ஒரு கொலை குற்றத்திற்காக சிறைக்குச் செல்கின்றனர். செய்யாத குற்றத்திலிருந்து விடுதலையாக இழப்பீடு தொகையையும் (ப்ளட் மணி) கிஷோர் தரப்பினர் கொடுத்து விடுகின்றனர்.

ஐந்து வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகு இருவருக்கும் தூக்குத் தண்டனை கொடுக்கிறது குவைத் அரசாங்கம்.

கிஷோரும் அவரது தம்பியும் தூக்கு மேடைக்குச் செல்ல 30 மணி நேரமே இருக்கும் நிலையில், தனது மீடியா திறமையை வைத்து ப்ரியா பவானி சங்கரும் சிரிஷும் அவர்களை காப்பாற்றினார்களா இல்லையா .?? என்பதே படத்தின் மீதிக் கதை…

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ப்ரியா பவானி சங்கருக்கு ஏற்ற கதாபாத்திரம் தான். பத்திரிகை துறையில் இருந்து நடிகையாக அவதரித்த ப்ரியாவிற்கு இக்கதாபாத்திரம் கைவந்த கலை தான்.. மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்.

தன்னைப் போல, வேறொரு குழந்தை, தந்தை இல்லாமல் வளரக்கூடாது என கிஷோரை காப்பாற்ற போராடும் ப்ரியாவின் கதாபாத்திரம் துணிச்சலானது.. பாராட்டலாம்..

கிஷோரை காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கும் ப்ரியா, ஆங்காங்கே தடுமாறும் போது, அவருக்கு உறுதுணையாக உதவும் கதாபாத்திரமாக சிரிஷ். அக்கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

கிஷோர், தனது அனுபவ நடிப்பை மொத்தமாக இறக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தன் மகளை காண ஏங்கும் ஒரு தந்தையின் ஏக்கத்தை, பரிதவிப்பை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார். தன் நடிப்பால் பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார் கிஷோர்.

பஞ்சு சுப்பு, வினோத் சாகர், ஸ்ரீலேகா இராஜேந்திரன் உள்ளிட்டோர் கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக பொருந்தியிருக்கிறார்கள். அவரவர்கள் தங்களது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்துள்ளனர்.

திரைக்கதை மற்றும் வசனத்தை தாங்கியிருக்கிறார் சங்கர் தாஸ்.

குவைத்தின் காட்சிகளாக இருக்கட்டும், சென்னையில் ப்ரியா பவானி சங்கரின் காட்சிகளாக இருக்கட்டும் தனிக் கவனம் கொண்டு தனது நேர்த்தியான ஒளிப்பதிவினை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவு G பாலமுருகன் DFT.

பின்னனி இசையில் சதிஷ் ரகுநந்தனி இசை கதையோட்டத்திற்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.

க்ளைமாக்ஸ் காட்சிகளில் படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு அமரவைத்துவிட்டார் இயக்குனர்

வலுவான கதையாக இருந்தாலும், காட்சியமைப்பின் வேகம் சற்று மெதுவாக செல்வதால், பெரிதான வலியை ஏற்படுத்த தவறுகிறது “ப்ளட் மணி”.

ப்ளட் மணி – வலி அதிகம் இருந்தும் வலிக்காமல் போனதேனோ.? 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close