நடிகர் அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று நடைபெற்றது . இருவரும் இணைந்து நடித்துள்ள “புளூ ஸ்டார் ” படத்தில் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
லெமன் லீப் கிரியேசன்ஸ், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “புளூ ஸ்டார்” .
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, அருண் பாலாஜி, மற்றும் பலர் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட கதை களத்துடன் உருவாகியிருக்கும் படம் புளூ ஸ்டார்.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனர் ஜெய்குமார் இந்த படத்தினை இயக்கியிருக்கிறார். திரைக்கதை மற்றும் வசனம் தமிழ்பிரபா இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
எடிட்டர் செல்வா .
கலை – ரகு.
இந்த படத்தில் நடித்திருந்த அசோக் செல்வனும் , கீர்த்தி பாண்டியனும் இன்று திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்காக அவர்கள் நடிப்பில் உருவான “ரயிலின் ஒலிகள்” என்கிற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.
பிரதீப் குமார், சக்திஸ்ரீகோபாலன் பாடியிருக்கிறார்கள்.
பாடல் வரிகள் – கவிஞர் உமாதேவி .
இசை – கோவிந்த் வசந்தா.
தயாரிப்பு – R. கணேஷ் மூர்த்தி.
G. சவுந்தர்யா.
பா.இரஞ்சித்