Spotlightவிமர்சனங்கள்

ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ விமர்சனம் 2.5/5

ரியோ ராஜ், ஜெய்னீஸ், குணாளன், நபீஷா மூனிலா ஆகியோரின் நடிப்பில் ஜோ ஜியோவானி சிங் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்”. கதையின் டைட்டில் சற்று வித்தியாசமாக இருக்கிறதே படத்தையும் வித்தியாசமாகத்தான் கொடுத்திருப்பார்கள் என்று நம்பி சென்ற நம்மை….

சிங்கப்பூரில் தொடங்குகிறது கதைக்களம். தொடர்ந்து மருத்துவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார் காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ்.

இது ஒருபுறம் இருக்க, எப்போதும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் ரியோ ராஜிடம், அவரது அக்கா ரிஸ்க்கான ஒரு டாஸ்க்கை கொடுக்கிறார். இருவரும் தனித்தனியே ஒரு வீட்டிற்குள் அனுப்பி, அங்கு இருக்கும் பொருளை யார் எடுத்து வருகிறாரோ அவர் தான் வின்னர் என்று கூறுகிறார்.

அதேபோல் இருவருமே, அந்த டாஸ்க்கை செய்கிறார்கள். அதே நேரத்தில் இந்த தொடர் கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை..

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரையும் நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ஜோ ஜியோவானி சிங். வழக்கமான கொஞ்சல்கள், துறுதுறு நடிப்பைக் கொடுத்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். சின்னத்திரையில் பார்த்த ரசிகர்களை பெரிய திரையில் நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறார் ரியோ.

போலீஸ் அதிகாரியாக ஜெய்னீஷ் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குணாளன் சைக்கோவாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நாயகியான நபிஷா அழகிலும் நடிப்பிலும் அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.

இயக்குனரான ஜோ ஜியோவானி சிங் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

கதையை மிக தெளிவாக எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையிலும் மட்டும் சறுக்கியிருக்கிறார். இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

கதை ஆங்காங்கே தடுமாறி வேறு வேறு திசையில் பயணிப்பது ரசிகர்களை சற்று சலிப்படைய வைத்திருக்கிறது.

மற்றபடி,

ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ வித்தியாசமான கதைகளை ரசிக்கும் ரசிகர்களை வெகுவாக கவரும்..

Facebook Comments

Related Articles

Back to top button