
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் தமிழகத்தில் பல தொகுதிகளில் நான்காவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் இயக்குநரும் தயாரிப்பாளருமான சிவி குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் கமலை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ”போ… போ… எல்லாம் முடிஞ்சிருச்சு போ … உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ…” என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல் வெளியிட்ட விளம்பரத்தில் டிவியை உடைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அத்துடன் தற்போது கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கவுள்ளார். இதை இரண்டையும் ஒப்பிட்டு கமலை கிண்டல் செய்து சிவி குமார் பதிவிட்டுள்ளார்.
Facebook Comments



