Spotlightவிமர்சனங்கள்

சிந்துபாத்; விமர்சனம்

கொஞ்சம் சத்தமாக பேசினால் தான் கேட்கும் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி மற்றும் அவருடன் கூட பிறவா தம்பியாக வரும் சூர்யா விஜய்சேதுபதி (விஜய்சேதுபதியின் மகன்).

இருவரும் கைதேர்ந்த திருடர்கள். திருட்டிலும் நேர்மையை கடைபிடிப்பவர்கள். மலேசியாவில் கூலி வேலை செய்து இந்தியா திரும்பியவர் அஞ்சலி. ’நான் மெதுவாகதான் பேசுறேன்’ என்பதை கூட சத்தமாக பேசக் கூடிய துணிச்சலான பெண். ஒரே ஊரைச் சேர்ந்த விஜய் சேதுபதியும் அஞ்சலியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.

இவர்களது காதலை, அஞ்சலியின் அக்கா கணவர் அருள்தாஸ் எதிர்க்க, அவரை அடித்து துவம்சம் செய்து விடுகிறார் விஜய் சேதுபதி. அடுத்தநாளே மீண்டும் வேலைக்காக மலேசியா செல்லும் அஞ்சலியை ஏர்போர்ட்டில் வைத்து அவரது கலுத்தில் தாலியை கட்டி விடுகிறார் விஜய் சேதுபதி.

தான் இரண்டு நாட்களில் மீண்டும் இந்தியா வந்துவிடுவதாக சொல்லிவிட்டு செல்கிறார் அஞ்சலி. அடுத்தநாளே விஜய் சேதுபதிக்கு போன் வருகிறது, தன்னை அக்கா கணவர் இங்கு அடமானம் வைத்துவிட்டதாகவும், மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கு தன்னை கொண்டு செல்வதாகவும் கூறி கதறுகிறார்.

இதனால், விஜய் சேதுபதியும், சூர்யா விஜய் சேதுபதியும் தாய்லாந்து செல்கிறார்கள். அங்கு, இவர்களுக்கு என்ன என்ன பிரச்சனை வந்தது..?? அஞ்சலியை காப்பாற்றினார்களா… ??? இல்லையா..???? என்பதே படத்தின் மீதிக் கதை.

விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். எப்போதும் போல் தனது ரசிகர்களுக்கு ஏற்ற நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார்.

அங்காடித் தெரு படத்திற்கு பிறகு அஞ்சலிக்கு நடிப்பிற்கான இடம் கிடைத்த படம் இதுதான் என்றே கூறலாம். அந்த இடத்திலும், நல்ல ஸ்கோர் செய்து நடித்திருக்கிறார். முதல் பாதியில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகளாக இருக்கட்டும் இரண்டம் பாதியில் வில்லன்களிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளாக இருக்கட்டும் தன்னுடைய நடிப்பை செவ்வென பூர்த்தி செய்து ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார்.

தனக்கு இதுதான் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு தனது நடிப்பை பூர்த்திகரமாக கொடுத்திருந்தார் சூர்யா விஜய் சேதுபதி.

வில்லனாக நடித்த லிங்கா தனது நடிப்பில் மிரட்டலை கொடுத்திருக்கிறார். சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி கூடவே சப் – இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்தவர் தான் இந்த லிங்கா. அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் அப்படிப்பட்ட வித்தியாசம். நல்ல ஒரு கட்டுடலுடன் வில்லனுக்கேற்ற ஒரு லுக்குடன் நடிப்பில் மிரட்டலை கொடுத்திருக்கிறார். டாப் வில்லன்கள் லிஸ்டில் இவரும் நிச்சயம் இடம் பிடிப்பார்.

முதல் பாதியில் நல்ல நிதானமான வேகம் காட்டிய இயக்குனர், இரண்டாம் பாதியை அப்படியே விட்டுவிட்டதுதான் படத்தினை வேறு கோணத்திற்கு சென்று விட்டது.

முதல் பாதியில் விஜய் சேதுபதி, சூர்யா விஜய் சேதுபதி, ஜார்ஜ் மூவரும் இணைந்து கலக்கிய காமெடி, பாடல், கதையின் நகர்வு என அனைத்தும் படத்தை நல்ல தளத்திற்கு எடுத்துச் சென்றது…

இரண்டாம் பாதி ஆரம்பித்த பிறகு, எப்போது இந்த படம் முடியும் என்ற அளவிற்கு பார்ப்பவர்கள் அனைவரையும் டென்ஷன் அடைய வைத்துவிட்டது….

தேவையில்லாத காட்சி திணிப்புகள், நம்மை மேலும் கடுப்பேற்றிவிட்டது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடல் ரகம், பின்னனி இசை ஓகே தான்… யுவனின் இசை மிரட்டல் இப்படத்தில் இல்லை…

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கலர்புல்.

ரூபனின் படத்தொகுப்பு இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தியை போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

நிறைய எதிர்பார்ப்புகள் வந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது.

சிந்துபாத் – முதல் பாதியை மட்டும் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றால் ’நலம்’…

Rating 2.5/5

Facebook Comments

Related Articles

Back to top button