
சிம்மக்குரல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ற ஒருவர் இருப்பாரேயானால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. தனது கம்பீர குரலில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து நின்றவர்.
தமிழக மக்களின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையுடன் அவர் பேசிய முழக்கங்கள் மற்றும் தே.மு.தி.க.வின் பொது கூட்டங்கள்,தேர்தல் பிரச்சாரங்கள்,மாநாடுகள்,நலத்திட்ட உதவிகள்,எதிர் கட்சி தலைவராக இருந்து செய்த சாதனைகள், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடத்திய போராட்டங்கள் போன்றவற்றின் கம்பிர பேச்சுகள் ,”கேப்டனின் இடி முழக்கம்”என்ற நிகழ்ச்சியின் மூலம் கேப்டன் டிவியில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மேலும், மறுஒளிபரப்பாக தினமும் காலை 7.30 மணிக்கு கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்படுகிறது.
Facebook Comments