Spotlightவிமர்சனங்கள்

டைரி – விமர்சனம் 2.5/5

யக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி, வித்ரா மாரிமுத்து, கிஷோர், ஜெயப்பிரகாஷ், நக்கலைட்ஸ் தனம், ஷாரா, தணிகை, சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “டைரி”. எப்போதும் தனது படங்களில் கதைகளை முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதி, இப்படத்தின் கதை தேர்ந்தெடுப்பில் கவனம் செலுத்தினாரா இல்லையா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் பணியில் சேர்வதற்காக பயிற்சியில் இருக்கிறார் அருள்நிதி. மேலதிகாரி ஒருவர், பயிற்சிக்காக பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் வழக்கில் எதாவது ஒன்றை எடுத்து விசாரணை நடத்த அருள்நிதியிடம் உத்தரவிடுகிறார்.

கண்ணை மூடிக் கொண்டு ஒரு ஃபைலை கையில் எடுக்கிறார் அருள்நிதி. பல வருடங்களுக்கு முன் ஊட்டியில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு அது. அந்த வழக்கை விசாரணை செய்ய ஆரம்பிக்கிறார் அருள்நிதி. இந்த வழக்கு திசை மாறி வேறொரு பக்கம் செல்கிறது. பல மர்மங்களும் விசாரணையில் அரங்கேறுகிறது.

அது என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.

நாயகன் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் மிடுக்கான தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நடிப்பிலும் வழக்கம் போல் தனி முத்திரை பதித்திருக்கிறார். நாயகியை பார்த்ததும் காதலா.? அருள்நிதி சார்.. இன்னமும் தமிழ் சினிமா மாறவில்லை போல..

படத்தில் நடித்திருந்த கிஷோர், ஜெயப்பிரகாஷ், நக்கலைட்ஸ் தனம், ஷாரா, தணிகை, சதிஷ் என்று நடித்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் கதை தனித்துவமாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் டைரி’இன்னமும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

அரவிந்த் சிங் அவர்களின் ஒளிப்பதிவு தனிக்கவனம் கொள்ள வைக்கிறது. பேருந்தில் நடக்கும் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

பேருந்து கீழே விழும் காட்சியை இனிமேலாவது தமிழ் சினிமா கைவிட வேண்டும்.. போதும் சாமி முடியல..

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒரு பேருந்துக்குள்ளேயே பெரும்பாலும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். இரவு நேர காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பவர், எது கிராபிக்ஸ், எது உண்மையான காட்சிகள் என்று தெரியாதபடி பல காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பேருந்தில் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.

க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் அம்மா பாடல், கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைக்கிறது.

கடைசி 20 நிமிடங்கள், சீட்டின் நுனியில் இருந்து படத்தை பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் இன்னாசி பாண்டியன்.

இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.

டைரி – நடுவுல கொஞ்சம் பக்கத்த சரி செய்திருக்கலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button