Spotlightசினிமா

கிராமத்திலிருந்து நகரத்திற்கு சென்றுவிட்ட இயக்குநர்!

 

இதற்கு முன் முதல் படமாக, தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டியை வைத்து ‘மன்னாரு’, அடுத்ததாக அதிரடி எதிர்நாயகன் ஆர்.கே. சுரேஷை வைத்து ‘வேட்டைநாய்’ போன்ற கிராமியம் சார்ந்த நேட்டிவிட்டி படங்களை இயக்கிய எஸ்.ஜெய்சங்கர் மூன்றாவதாக முழுக்க முழுக்க நகரம் சார்ந்த கதையை எடுத்துக்கொண்டு இயக்கவிருக்கும் படம் ‘ஸ்ரீதேவி ஏஜ் 16’.

இப்படத்தை VNR வழங்கும் MM கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வேல் நாகராஜ் தயாரிக்கிறார்.

படம் பற்றித் தயாரிப்பாளர் வேல் நாகராஜ் பேசும்போது,

” நான் பைனான்ஸ்,Anchor Real Estates, Anchor Treaders,போன்ற தொழில்களைச் செய்து வருகிறேன்.

‘அன்பும் ஆக்கமும்’ என்றொரு அறக்கட்டளை நடத்தி வருகிறோம்,இந்த அறக்கட்டளை மூலமாக பலருக்கும் உதவி செய்து வருகிறோம். கொரோனா காலத்தில் தினசரி 200 குடும்பங்களுக்கு உணவு விநியோகம் செய்து வந்தோம், தொடர்ச்சியாக 100 குடும்பங்களுக்கு வாராவாரம் அரிசி,மளிகைப் பொருட்களை வழங்கினோம்,இந்த உதவிகளை போலீஸ் அதிகாரிகளை வைத்தும் திரைப்பட நட்சத்திரங்களை வைத்தும் வழங்கினோம்.எனக்கு இப்படி உதவி செய்ய என் தொழில் மிகவும் உதவியாக இருந்தது. எனக்கு நானறிந்த வயதிலிருந்து சினிமா மீது ஆர்வம் உண்டு. இப்போது முதலில் நான் படத் தயாரிப்பில் இறங்கி இருக்கிறேன். தொடர்ந்து படங்கள் எடுக்க எனக்கு விருப்பம் உள்ளது. சத்தியராஜ் நடித்த 6.2 என்னும் படத்தை இயக்கிய இயக்குநர்,செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும், மன்னாரு,வேட்டை நாய் படங்களை இயக்கிய இயக்குனர் ஜெய்சங்கர் இயக்கத்தில் ஒரு படமும் இரண்டு படங்களை இப்பொழுது தயாரிக்கிறேன், தொடர்ந்து கலைத்துறையில் பயணம் பண்ண கடவுளின் ஆசி யோடும், உங்களின் அன்போடும் ஆர்வமாக உள்ளேன்,பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன்” இவ்வாறு கூறினார்.
இயக்குநர் ஜெய்சங்கர் பேசும்போது,

“பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். துள்ளி மகிழும் பதின் பருவத்தில் நிகழும் பருவகால இளமைக் கோலங்களை வெளிப்படுத்தும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button