இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் ஊர்வசி, கலையரசன், பாலு வர்கீஸ், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “சார்ல்ஸ் எண்டர்ப்ரைசஸ்”.
கதைப்படி,
பிரிந்து இருக்கும் குரு சோமசுந்தம் மற்றும் ஊர்வசி ஜோடிக்கு மகனாக வருகிறார் பாலு வர்கீஸ். தனது அம்மா ஊர்வசியுடன் வாழ்ந்து வருகிறார் பாலு வர்கீஸ். கேக் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வரும் பார்லு வர்கீஸுக்கு இருட்டைக் கண்டால் பார்வை தெரியாது. அதாவது நன்றாக வெளிச்சம் இருந்தால் மட்டுமே பார்வை தெரியும்.
இந்த குறையால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார். தனது வேலையிலும் சரியாக ஈடுபாடு செலுத்த முடியாமல் கவலைபடுகிறார். அதனால் தனியாக் கடை ஒன்றை நடத்த திட்டமிடுகிறார். ஆனால் பணம் இல்லை.
தனது குடும்ப தெய்வமான பிள்ளையார் சிலை ஒன்றை, பல வருடங்களாக தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார் ஊர்வசி. தீவிர விநாயகர் பக்தையாக வருகிறார் ஊர்வசி.
இந்த பிள்ளையார் சிலை மிகவும் மதிப்புமிக்கது. இந்த சிலையை அடைய நினைக்கின்றனர் சிலர்.
அதற்காக வரும் ஒரு டீம் பாலு வர்கீஸிடம் பேரம் பேசுகிறது. சிலையை கொடுத்தால் பல லட்சங்கள் தருவதாக கூறுகிறது. முதலில் தயக்கம் காட்டும் பாலு, பிறகு ஒப்புக் கொள்கிறார்.
இறுதியாக அந்த சிலையால் பாலு வர்கீஸின் கனவெல்லாம் நனவானதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சரியான தேர்வு தான். படத்தில் காமெடி செய்வதற்கான இடங்கள் பல இருந்தும் அதை கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர்.
கதை முழுவதும் இழு இழுவென இழுத்துக் கொண்டே சென்றது நம்மை பொறுமையின் உச்சத்திற்கே கொண்டு செல்ல வைத்து விட்டார் இயக்குனர்.
பழங்கால சிலைகளை பாதுகாப்பது தான் நம் நாட்டின் தலையாய கடமை, அதுவே ஒரு படத்தின் ஹீரோவுக்கான இலக்கணமாக இருக்கக் கூடும். ஆனால், இப்படத்திலோ அதற்கு நேர்மாறாக க்ளைமாக்ஸ் காட்சிகளை கொண்டு வந்து சோதித்துவிட்டார் இயக்குனர்..,
படத்தின் ஒரு பாடல் கேட்கும் ரகம். ஒளிப்பதிவு கலர்ஃபுல்.
குருசோமசுந்தரத்திற்கெல்லாம் பெரிதான காட்சிகள் எதுவும் இப்படத்தில் கொடுக்கப்படவில்லை. படத்தினை எப்பதான் முடிப்பீங்க என்று ஏங்க வைக்கும் அளவிற்கு க்ளைமாக்ஸ் காட்சியினை இழுத்தேக் கொண்டு சென்று விட்டார்கள்.
சார்ல்ஸ் எண்டர்ப்ரைசஸ் – எண்டர்டெயின்மெண்ட்க்கு பஞ்சம் தான்…