Spotlightவிமர்சனங்கள்

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் – திரை விமர்சனம் 3.25/5

விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இருவரின் இயக்கத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்த் ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹுசைனி, சூர்யா கணபதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்” திரைப்படம்.

படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தயாரிப்பாளர் : பாபி பாலச்சந்திரன்

தயாரிப்பு நிறுவனம் : பி. டி. ஜி யுனிவர்சல்

வியூகத் தலைமையாளர் : டாக்டர் மனோஜ் பெனோ

படத்தொகுப்பாளர் : சுரேஷ் A பிரசாத்

கதைக்குள் சென்று விடலாம்…

இது முழுக்க முழுக்க காமெடிக்கான திரைப்படம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு கதைக்குள் பயணமாகலாம்…

திருடர்களாக வருகின்றனர் வைபவ் மற்றும் மணிகண்ட ராஜேஷ். திருடிக் கொண்டு போலீஸில் மாட்டிக் கொண்டால், இவர்களை வெளியே எடுத்து வருவது லிவிங்ஸ்டன் தான். சிறுவயதில் செய்த ஒரு உதவிக்காக இருவரையும் அவ்வப்போது காப்பாற்றிவிடுவதே லிவிங்க்ஸ்டனின் வேலையாக இருக்கிறது.

பிரபல தாதாவான சிஹான் ஹூசைனி, லிவிங்ஸ்டனிடம் ஒரு அசைன்மண்ட் கொடுக்க, அதனை தூக்கி வைபவ் மற்றும் மணிகண்டனிடம் கொடுக்கிறார் லிவிங்க்ஸ்டன்.

அசைன்மண்ட் மூலம் கிடைத்த சுமார் 2 கோடி ரூபாயை, இருவரும் தொலைத்துவிட, சிஹான் & டீம் இருவரையும் தேடி அலைகிறது.

பணத்திற்காக ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுனில் ரெட்டி இவர்களிடம் தஞ்சம் அடைகின்றனர் வைபவும் மணிகண்டனும்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தனியார் வங்கியை கொள்ளையடிக்க ப்ளான் செய்கின்றனர்.

இறுதியில், இவர்கள் அந்த வங்கியை கொள்ளையடித்தார்களா இல்லையா.? சிஹான் டீமிடம் இருந்து லிவிங்ஸ்டன் , வைபவ் மற்றும் மணிகண்டன் இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

தான் தோன்றும் காட்சிகள் அனைத்திலும் கலகலப்பான காமெடிகளை அள்ளிக் கொடுத்துவரும் வைபவ், இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார். மணிகண்ட ராஜேஷும் இவரும் இணைந்து அடிக்கும் காமெடிகள் படத்தில் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது.

சின்ன சின்ன காமெடி காட்சிகளில் மணிகண்டனின் உழைப்பும் நன்றாகவே எடுபட்டிருக்கிறது. ஆனந்தராஜ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரின் காமெடி காட்சிகள் தான் படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.

மறதி மொட்டை ராஜேந்திரன், குடிகாரன் சுனில், காது கேளாத, ஜான் விஜய், சைரன் சத்தம் கேட்டால் போலீஸாக மாறிவிடும் ஆனந்தராஜ் என இவர்களின் கதாபாத்திரத்தின் அறிமுகமே படத்தின் சிரிப்பலைகளை எட்டிப் பார்க்க வைத்துவிட்டது.

சுரங்கத்திற்குள் சென்று முதலில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வரும் காட்சி, வங்கிக்குள் சென்று கொள்ளையடித்தப் பிறகு ஆனந்தராஜ் போலீஸாக மாறும் காட்சி என பல இடங்களில் காமெடிகளை அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

ஒவ்வொரு காட்சியையும் கலகலப்பாகவே நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். நாயகியாக அதுல்யா ரவி ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களின் மனம் முழுவதும் நிரம்பி செல்கிறார்.

அமைச்சராக இளவரசனின் அட்ராசிட்டி, போலீஸாக வருபவர், அமைச்சரின் உதவியாளர் என படத்தில் நடித்த அனைவருமே காமெடியில் சிலாகிக்க வைத்துவிட்டார்கள். கதை சற்று பழையதாக இருந்தாலும், இக்காலத்திற்கு தேவையான திரைக்கதை அமைத்து குடும்பத்தோடு ரசிக்கும்படியான ஒரு தரமான நகைச்சுவை படத்தை படைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

பின்னணி இசையில் இமான் இன்னும் மெனெக்கெடல் செய்திருக்கலாம். ஒளிப்பதிவு கலர்புல்லாக இருந்தது.

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் – சிரிப்புக்கு இவங்க கேரண்டி…

Facebook Comments

Related Articles

Back to top button