
கதை – ஒரு அரசாங்க திட்டத்தை கையில் எடுக்க லஞ்சம் கொடுப்பதற்காக கருப்பு பணத்தை வெள்ளையாக்க ஒரு Corporate company முதலாளி முயற்சி செய்கிறார். இதற்காக நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து பினாமி ஆக்குகிறார்கள். அதில் ஒருவர் தான் தனுஷ்.
இவர்களை வைத்து Transaction செய்து முடிந்தவுடன், தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்கள். அப்படி மூன்று பேர் சாக கடைசியில் தனுஷ் பிழைத்தாரா ?இல்லையா ? என்பதே கதை.
படத்தில் ஆகப்பெரும் பலம் தனுஷ் தான். திரைப்படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்து வந்தாலும் முதல் சீனிலேயே ஸ்கோர் செய்து விடுகிறார். அதற்குப் பிறகு பிச்சைக்காரர்கள் இருந்து பிசினஸ்மேனாக மாற கொடுக்கும் training காட்சிகள் ஆகட்டும், போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்குவது ஆகட்டும் , இறந்த பிச்சைக்காரனின் முன்பு ஆடுவது ஆகட்டும் என படத்தில் பல காட்சிகளில் பின்னி எடுத்துள்ளார்.
இரண்டாவது பெரிய பலம் படத்தின் First half. இதுதான் கதை என்று நல்ல stage செய்த பின்னர் கருப்பு பணத்தை எப்படி வெள்ளையாக்குகிறார்கள். அதற்கு எப்படி பிச்சைக்காரர்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை நேர்த்தியாக கொண்டு சென்று அதில் ஒரு conflict உருவாவதை அழகாக சொல்லி இருந்தார்கள்.
நாகார்ஜுனாவும் ராஷ்மிகவும் கதைக்கு நல்ல வலு சேர்த்து இருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய positive DSP தான். அவருடைய பாடல்களும் பின்னணி செய்யும் நன்றாக கவனம் ஈர்த்துள்ளது.
கதையோடு சேர்ந்து வரும் சின்ன சின்ன காமெடிகள். நிறைய இடத்தில் வருகிறது. நன்றாகவும் இருக்கிறது.

எல்லா படங்களிலும் உள்ளது போல Second half தான் இந்த படத்தில் பிரச்சனை. நன்றாக stage செய்த கதையை இரண்டாம் பாதியில் வில்லனிடம் இருந்து தப்பித்து ஓடுவதை மட்டும் ஒன்றரை மணி நேரம் படம் ஆக்கி இருக்கிறார்கள்.
படம் முழுதும் ஒரு எதார்த்த தன்மையுடன் போக Pre- கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் செயற்கைத்தனம் நிறைய எட்டி பார்க்கிறது.
படத்தில் தோன்றிய நடிகர், நடிகைகள் அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் அளவாகவும் செய்து முடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பிச்சைக்காரராக தாடியுடன் தனுஷ் தோன்றிய காட்சிகள் அனைத்திலும், தனது நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். ஒரு கை உடைந்ததை படம் முழுவதிலுமே அதை தொடர்ந்தது மிகவும ஆச்சர்ப்பட வைத்தது.
லட்சம் கோடிக்கு அதிபதியான வில்லனை, க்ளைமாக்ஸில் அப்படி நடந்து கொள்வாரா என்பது குறித்த சந்தேகம் எழாமல் இல்லை. நாகர்ஜூனா தனது அனுபவ நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்கம்: சேகர் கம்முலா
நடிகர்கள்: தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா, ஜிம்,
ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ்
குபேரன் – கோலோற்றினான்..
க்ரெடிட் – shiv





