ஐபிஎல் தொடரின் 56-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 54 ரன்களும், மனோஜ் திவாரி 35 ரன்களும், டேவிட் மில்லர் 24 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இந்நிலையில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சி.எஸ்.கே பேட்டிங் செய்யக் களமிறங்கியது.
19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்த சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி அபார சிக்சர் ஒன்றை விளாசி சி.எஸ்.கே அணியின் வெற்றியை உறுதி செய்தார். ரெய்னா 61 ரன்களுடனும், தோனி 16 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் முந்தைய போட்டியில் பஞ்சாப் அணியிடம் பெற்ற தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழிதீர்த்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததால், அந்த அணியின் பிளே-ஆஃப் கனவு சிதைந்தது.