Spotlightசினிமா

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா.?? அல்லது…

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று மரணமடைந்தது இந்தியாவையே உலுக்கி உள்ளது. பாலிவுட் அடுத்தடுத்து சில நடிகர்களை தொடர்ந்து இழந்து வருகிறது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியாக மதியம் 12 மணிக்கு மேல் தான் அவரது உடலை வெளியே எடுத்து உள்ளனர்.

காலையில் இருந்து அவர் ரூம் விட்டு வெளியே வரவில்லை, போன் அடித்தும் எடுக்கவில்லை, சாப்பிடவும் வரவில்லை என்றதும் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பின் ரூமின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அந்த அறையில் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அப்போது அவர் குர்தா அணிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, உடலை போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். அவர், கொலை செய்யப்பட்டிருக்கலாமா..?? என்ற கோணத்தில் போலீஸார் அவரது ரூமை ஆய்வு செய்த போது அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

அதன்பின், தற்கொலை கடிதமும் எதுவும் கிடைக்கப்படவில்லை. இறப்பதற்கு முன் அவர் பேசிய போன் கால்களிலும் பெரிதாக மனம் உடைந்த பேச்சுகளும் அதில் இல்லை.

தற்கொலைக்கு முன், தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை யாரும் அறிய கூடாது என்பதில் தெளிவாக் இருந்திருக்கிறார் சுஷாந்த் சிங்.

எனினும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மற்ற விபரங்கள் தெரியவரக்கூடும் என்கிறது போலீஸ் தரப்பு.

Facebook Comments

Related Articles

Back to top button