
கதிர் பிலிம்ஸ் சார்பில் பால் டிப்போ கே. கதிரேசன் தயாரிப்பில் பி எல் பொன்னி மோகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘வாழ்க விவசாயி’.
தேசிய விருது பெற்ற நடிகர் அப்பு குட்டி இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக வசுந்த்ரா நடிக்கிறார்.
ஜெய்கிருஷ் இசையமைக்க, இரதன் சந்தாவத் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
தற்போதைய விவசாயம் மற்றும் விவசாயியின் நிலை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை போற்றும் படமாக இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Facebook Comments





