Spotlightசினிமா

பூஜையுடன் துவங்கியது ‘சீயான் 60’.. படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று முதல் உருவாக இருக்கிறது ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் தொடங்கப்பட இருக்கிறது.

இப்படத்தில் தந்தை, மகன் இருவரும் நடிக்கின்றனர். சீயான் விக்ரமிற்கு இது 60வது படமாகும். துருவ் விக்ரமிற்கும் இது ஒரு முக்கியமான படமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். துப்பாக்கிகளில் தோட்டாக்கள் சிதற அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் அறிவிப்பு சற்று நேரத்திற்கு முன் தான் வெளியானது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button