Spotlightசினிமா

ரஜினிகாந்த் படத்தில் இணைந்த காமெடி நடிகர்!

காலா திரைப்படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் இணைந்துள்ளார். இவர் நடித்த முண்டாசுபட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘ராமதாஸ்’ என்ற பெயரில் திரைத்துறைக்கு வந்த இவர் இப்படத்தின் மூலம் முனிஷ்காந்த் ஆனார்.

ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை மூன்று மாதத்திற்குள் முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button