விஜய் டிவி நடத்தும் “வில்லா டூ வில்லேஜ்” நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பாப்புலரான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மோஸ்ட் வான்டேட் பாப்புலரான பிரபலம் அக்ஷரா ரெட்டி.
இந்த நிகழ்ச்சி நேரிடையாக கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சி. நம் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயில் நாம் வாழ வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் ஒன் லைன். என் டெடிகேஷனை பார்த்து “மஹாலஷ்மி” விருதை எனக்கு கொடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவம். மாடலிங் பொண்ணுகளும் கிராமத்திற்கு போய் வாழ முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த நிகழ்ச்சி.
நான் பொதுவாக உடற்பயிற்சியின் மீது பெரும் காதல் கொண்டவள், தினமும் இரண்டு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் அந்த நிகழ்ச்சியை எளிமையாக கடக்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் ரன்னர் அப், பெஸ்ட் ஆல் ரவுண்டர், அழகான முகம் ஆகிய அவார்ட்டுகளை பெற்று தந்தது இந்த நிகழ்ச்சி. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்களோட வின்னர் இவங்க தான்.
இவர் ஜார்ஜியா டிப்லிஸி யுனிவர்சிட்டியில் மாஸ்டர் டிகிரி முடித்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், இங்கிலீஷ் என அத்தனை மொழிகளையும் கற்றுக்கொண்டவர்.
இதுவரை 150க்கு மேல் ரேம்ப் வாக் செய்துள்ளார். இதில் இந்திய பிரபலங்கலான மாதிரி தீட்ஷித், ஜீகி சாவ்ல உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். தென்னிந்திய அளவில் பல அழகிப் போட்டிகளுக்கு ஜர்ஜ் ஆக இருந்துள்ளார்.
குமரன்சில்க்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், யுனிவர்சல் மொபைல், பி.எஸ்.என்.எல் என நிறைய முன்னனி நிறுவனங்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.
விஜீத் ஜோடியாக இவர் நடித்த “ஹேப்பி நியூ இயர்” குறும்படத்தை இதுவரை நான்கு மில்லியன் பேர் பார்த்துள்ளனர். குறும்பட வரலாற்றில் இவ்வளவு பேர் மிகவும் ரசித்தது இந்த படமாகத்தானிருக்கும். ஹேப்பி நியூ இயர் குறும்படத்திற்கு பின் மேலும் இரண்டு வெப் சீரியஸ் கமிட்டாகியுள்ளார்.
சபதம் விஷன்ஸ் சார்பாக, பிரான்ஸிஸ் செல்வம் இயக்கும் படத்தில் விஜீத் ஜோடியாக தமிழ் மற்றும் மலேசிய படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ஜக்குபாய் படத்திற்கு இசையமைத்த ரபீக் இசையமைக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் மொரீஷியஸ் மற்றும் மலேசியாவில் தயாராகிறது. முதல் முறையாக தமிழ் படத்தின் படப்பிடிப்பை மொரீஷியஸ் அதிபர் பெர்லன் வையாபுரி தொடங்கி வைத்த முதல் சினிமா இதுதான்.
தமிழ் சினிமாவில் ஸ்கோப்புல்ல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.