
சசிகுமாரின் அடுத்த படமான “Common Man” படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் இதுவரை சுமார் 10ம் லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
இப்படத்தை சத்ய சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். ஒளிப்பதிவு ராஜா. ஆர்ட் டைரக்டர் உதயகுமார். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த்.
இப்படத்தை செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பாக TD ராஜா மற்றும் DR சஞ்சய் குமார் தயாரித்து வருகிறார்கள்.
இந்த வருடத்தில் படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் டைட்டில் டீசரில் வெட்டு, ரத்தம் என எதார்த்தமான சினிமா என்றில்லாமல் த்ரில்லர் படமாக தெரிவதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமன்றி, நாயகன் சசிகுமாரின் திரைப்பயணத்தில் அவர் இது போன்று கதையம்சத்தில் நடித்திராததால் இப்படம் அதிகமாக உற்று நோக்கப்படுகிறது.