Spotlightஇந்தியா

கரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி… ஜாக்கிசான் அறிவிப்பு!

லக புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுக்க மாற்று மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு தொகையை அறிவித்திருக்கிறார்.

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் சுமார் 23,000 பேருக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆயிரத்திற்கும் மேலானோர் இந்த நோயினால் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் ஜாக்கிசானின் வேன்குவார்ட் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வர அறிவியலும் தொழிநுட்பமும்தான் நமக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன். என்னை போல பலரும் அப்படிதான் நம்புகிறார்கள். வெகு விரைவில் வைரஸிற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புவோம். ’ என்று கூறிய ஜாக்கிசான், கரோனா வைரஸ்க்கான மாற்று மருந்து கண்டுபிடிப்போருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி தருவதாக அறிவித்துள்ளார் ஜாக்கிசான்.

Facebook Comments

Related Articles

Back to top button