
எழுத்து & இயக்கம்: அஸ்வின் சந்திரசேகர்
நடிகர்கள்: சந்தோஷ் ஷோபன், மானசா வாரணாசி, சுனில் ரெட்டி, யோகிபாபு
இசை: ஆதித்யா ரவீந்திரன்
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
தயாரிப்பாளர்: அஜய் குமார் ராஜு
வீடுகளுக்கான இன்டீரியர் துறையில் பெரும் சாதனை வேண்டும் என்று ஆசையில் தனது பயணத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார் கதை நாயகன் சந்தோஷ சோபன். மற்றொரு பக்கம் ஐடி துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று எண்ணி தனது பயணத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் கதையின் நாயகி மானசா வாரணாசி. இவர்கள் இருவரும் ஒரு பயணத்தில் சந்தித்துக் கொள்ள, இருவரும் காதலால் இணைகின்றனர். இருவரும் இணைந்து பெரும் சவால்களை சந்திக்க தொடங்குகின்றனர். அதன் பிறகு இவர்களது வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
மிகவும் எளிமையான ஒரு நடிப்பை கொடுத்து அனைவரின் மனதிலும் எளிதாக ஒட்டிக் கொள்கிறார் கதையின் நாயகன் சந்தோஷ் சோபன். மிகவும் எதார்த்தமான ஒரு நடிப்பை கொடுத்து அதன் கதாபத்திரமாகவே வாழ்ந்து ஒவ்வொருவரின் மனதிலும் எளிதாக ஒட்டிக் கொள்கிறார்.
கதாநாயகியும் ஹீரோவிற்கு இணையாக மிகவும் யுனிக்கான ஒரு நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அழகாக தெரிந்து தனது நடிப்பையும் எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறார் மானசா வாரணாசி .
கதையின் கதாபாத்திரத்தை ஹீரோ ஹீரோயின் இருவரும் நன்றாக உணர்ந்து கொண்டு தங்களது நடிப்பை நன்றாகவே ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். யோகிபாபு மற்றும் சுனில் ரெட்டி இருவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருந்தனர்.
ஆதித்யா ரவீந்திரனின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் ரம்மியமாக காட்சிப்படுத்தியதில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார்.
ஒரு காதல் கதையை இப்படியும் வித்தியாசமான ஒரு திரைக்கதை அமைத்து படம் பார்க்கும் ரசிகர்களை நன்றாகவே உணர்ச்சி பட வைக்கலாம் என்பதை இயக்குனர் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலமே கதாபாத்திரங்களையும் திரைக்கதையும் மிகவும் இயல்பாக கடத்திச் சென்றதே இப்படத்திற்கான வெற்றி என்று கூறலாம்
கப்புள் பிரண்ட்லி – இயல்பான ஒரு பயணம்…





