Spotlightசினிமா

பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ”லிட்டில் மேஸ்ட்ரோ” RS ரவிபிரியன்!!

வித்துவான் பாலகிருஷ்ணனின் பேரன் வழித்தோன்றலாய் வந்து இசையை முறையாக கற்றுக் கொண்டவர் ஆர் எஸ் ரவிப்பிரியன். கனடாவில் இருந்து கொண்டு இசையை கற்றுக் கொண்டு வந்துள்ளார் இவர்.

பாடல்களுக்கு ஏற்ப இசையைக் கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் ஆர் எஸ் ரவிப்பிரியன்.

சொல்ல வரும் கருத்துகளையும் சொல்ல வந்த உணர்வையும் இசைக்குள் வரும் பாடல் வரிகளை அடக்காமல், பாடல் வரிகளுக்கு ஏற்றாற் போல் இசையை வடிவமைத்து கொடுப்பதில் வல்லவராகவும் திறன் மிகுந்தவராகவும் இருப்பதாக சினிமா பாடகர்கள் பலரின் பாராட்டையும் பெற்ற இசையமைப்பாளராக இருக்கிறார் இவர்.

மேகம் , சாந்தன், உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ரவிபிரியன். ஏ எல் ராஜா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் சூரியனும் சூரியகாந்தியும் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

மேலும், கரிமூட்டம், வடசேரி மற்றும் Hi5 உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ரவிபிரியன்.

சில வருடங்களுக்கு முன் இவர் இசையமைத்து வெளிவந்த ”காற்று” என்ற ஆல்பம் மிகப்பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த ஆல்பத்திற்காக பெரிதாக இவரை பாராட்டியுள்ளனர்.

11 பாடல்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட ஆல்பத்தில் சுமார் 22 முன்னணி பாடகர்களை பாட வைத்து சாதனை படைத்துள்ளார் இசையமைப்பாளர் ஆர் எஸ் ரவிபிரியன்.

புகழ்பெற்ற எஷிதா மீடியா நிறுவனத்தால் ஆர் எஸ் ரவிபிரியனுக்கு லிட்டில் மாஸ்ட்ரோ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2022ம் ஆண்டிற்கான திரையிசை காவலன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருக்குறள் பாட்டரங்கம் சார்பில் “திருக்குறள் இசைக்கவி விருது” என்ற விருதும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், பல ஆல்பங்களுக்கும் இசையமைத்து வருகிறார் .

Facebook Comments

Related Articles

Back to top button