Spotlightசினிமா

வருங்கால நட்சத்திரங்கள் 21 பேருக்கு ஐஆர்ஐஎஸ் கிளாம் – நேச்சுரல்ஸ் அகாடமி அங்கீகாரம்

ஐஆர்ஐஎஸ் கிளாம் அகாடமி இன்று 21 வருங்கால நட்சத்திரங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. முன்னதாக இந்த நட்சத்திரங்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது.

பயிற்சியின் போது தாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் அதனால் கிடைத்த அனுபவங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு அமைந்திருந்தது.

பாலிவுட் நடன இயக்குநர் இயக்கத்தில் ஸ்விங்கர்ஸ் நடனக்குழுவினரின் நடனநிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றது. பிரபல நடனக்கலைஞர் சஞ்ஜெய்அஸ்ரானி இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை கொண்ட ஆடை அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வருங்கால நட்சத்திரங்களை நேச்சுரல்ஸ் சார்பில் பிரபல ஆடை அலங்கார அணிவகுப்பு புகைப்பட கலைஞர் திரு.அமல்ராஜ் படம் பிடித்தார். பொழுதுபோக்குத்துறையில் பிரபலமாக உள்ள தயாரிப்பாளர்கள், நிகழ்ச்சி மேலாளர்கள், விளம்பரதாரர்கள், மாடல் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

பயிற்சி முடித்து செல்லும் மாணவர்களுக்கு அழகான ஸ்டில் புகைப்படங்களுடன் விருதுகளும் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேஷன் புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் இதற்கான ஸ்டில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்தார்.

திரைப்பட நடிகர் நகுல், இயக்குநர் ஒருங்கிணைப்பாளர் திருமதி தாரா உமேஷ், ஜி.ஆர்.டி ஹோட்டல்கள் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.விக்ரம்காட்ச், நடிகர் திரு.மகேந்திரன், நடிகர் திரு.பிருத்விராஜ்,
மூத்த பத்திரிகையாளர் திருமதிலதாசீனிவாசன், தொலைக்காட்சி நடிகையும் மாடலும் நடன கலைஞருமான திருமதி.ரேஷ்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஐஆர்ஐஎஸ்கிளாம்வருங்காலமாடல்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோரை உருவாக்குகிறது. இதற்காக அவர்களுக்கு இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு சிறப்பான பயிற்சியை அளிக்கிறது. தொழில் ரீதியான அணுகுமுறை, அழகுபடுத்திக் கொள்ளுதல், நம்பிக்கையை உருவாக்குதல், நடனம், நடிப்பு, நடனத்தைஉருவாக்குதல், சுயமாக தன்னைப் பற்றி விளக்குதல், தன்னாளுமை மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பொழுது போக்குத்துறையில் பல்வேறு பிரிவுகளிலும் சிறந்து விளங்கும் வகையில் இந்த பயிற்சி அமைந்திருக்கும். உலக திரைப்படத்துறையில் காலடிபதிக்கும் வகையில் அவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். இதற்காக நேச்சுரல்ஸ் வழங்கும் ஐஆர்ஐஎஸ் கிளாம்பல் வேறு துறை நிபுணர்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கிறது. அழகுபடுத்த நேச்சுரல்ஸ், நளினத்திற்காகஃபிடா, பேஷன் நடனத்திற்காக சஞ்ஜெய் அஷ்ரானி, பாலிவுட் நடனத்திற்காக ஸ்விங்கர்ஸ், பேஷன் புகைப்படத்திற்காக அமல்ராஜ், தனிப்பட்டஆளுமையை வெளிப்படுத்த நந்திதாபாண்டே, ஸூம்பா நடனத்திற்காக சி மு அன்ட் நந்தா ஆகியோருடன் ஐஆர்ஐஎஸ் கிளாம் கைகோர்த்துள்ளது.

ஆர்ஐஎஸ்கிளாம்டாக்டர்லதாஏ.கிஷோர்முன்முயற்சியால்உருவானதாகும். இவர்கடந்த 19 ஆண்டுகளாக நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button