Spotlightசினிமா

”அலங்கு” படத்தை பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

யக்குனர் எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், அப்பானி சரத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “அலங்கு”.

வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், படம் பார்த்த பொதுமக்கள் படத்தினை வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில், நேற்றைய தினம் சென்னையில் இயக்குனர்கள் சிலருக்கு சிறப்பு காட்சியாக அலங்கு திரைப்படம் திரையிடப்பட்டது.

இதில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருக்கிறார். தனது எக்ஸ் தளத்தில், “ Watched Alangu – A raw n rustic action film about a Man’s love to a Dog based on a shocking true incident… Technically well made and really good performances from the whole cast…. Congratulations
Director SPShakthivel & Whole team 👏👏

All the best for a Big Box office Success …” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து படக்குழு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button