கவின், அபர்ணாதாஸ் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “டாடா”. இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடுவதன் மூலம் ‘டாடா’ படத்திற்கு வர்த்தக வட்டாரத்திலும் எதிர்aபார்ப்பு அதிகரித்துள்ளது.
’டாடா’ படத்தினை ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிக்க கணேஷ் கே பாபு படத்தினை இயக்கி உள்ளார். கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Facebook Comments