Uncategorized

உலக மொழிகளில் வெளியாகும் “ஹனு-மேன்”

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் படைப்பான ‘ஹனு-மேன்’, வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகி உலகளவில் வெளியாக இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ ஹனு- மேன்’. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தயாரிப்பாளர்கள் இந்த ‘ஹனு-மேன்’ திரைப்படத்தை மே மாதம் 12ஆம் தேதி அன்று கோடைகால விடுமுறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், மாண்டரீன், ஜப்பானிய மொழியில் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்புக்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், கெட் அப் சீனு, சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌர ஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சௌரப் என மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கலை இயக்கத்தை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கவனிக்க, படத்தொகுப்பை எஸ். பி. ராஜு தலாரி கவனித்திருக்கிறார்.

சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

பிரசாந்த் வர்மா – தேஜா சஜ்ஜா- கே. நிரஞ்சன் ரெட்டி ஆகியோர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஹனு-மேன்’, இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் உலகளாவிய மொழிகளிலும் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button