ஒரு இசையமைப்பாளரின் உண்மையான வெற்றி என்பது குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் மயங்குவதும், அந்த படைப்பாளியை பற்றி இணைய தளத்தில் தேடுவதும் தான். தற்காலத்திய சகாப்தத்தில் மிகவும் திறமையான கலைஞர்களுக்கிடையில் பெரும் போட்டி இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு கடினமான சூழ்நிலை நலவுகிறது. ஆனால் தர்புகா சிவா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தனது தனித்துவமான பண்புகளால் இசை ரசிகர்களை கவர்ந்திழுப்பதோடு, ரசிகர்களிடம் அமோக வரவேற்புகளையும் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் தர்புகா சிவா தனது இசைப்பயணத்தை புதுமையான இசையாலும், ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தையும் வழங்கி வருகிறார். எனை நோக்கி பாயும் தோட்டாவின் மூன்று சிங்கிள் பாடல்களால் (மறுவார்த்தை, விசிறி மற்றும் நான் பிழைப்பேனா) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டுள்ளார் தர்புகா சிவா. மேலும், இன்னும் ரிலீஸாகாத ஒரு படத்தின் பாடல்கள் நீண்ட காலமாக டாப் பாடல்கள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பது மிகவும் சவாலான விஷயம்.
தற்போது, இந்த இசையமைப்பாளர் அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க தயாராகி விட்டார். எஸ்பி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘ப்ரொடக்ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
“எங்கள் படத்தின் மதிப்பு தர்புகா சிவாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்த பிறகு மேலும் அதுகரித்துள்ளது. அவரது இசை திறமை மற்றும் இளம் இசை ரசிகர்களிடம் அவரின் பிரபலத்தன்மையை பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். அவரது இசையால் படத்தை நாங்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்” என பெருமையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஷங்கர்.
உச்சபட்ச கலைஞர்கள் பலர் இந்த படத்துக்குள் வருவது, நம்மை மிகவும் உற்சாகப்படுத்தும் விஷயங்கள் படத்தில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.