Spotlightசினிமா

1944 போர்க்களத்தில் சசிகுமார்! ‘யாத்திசை’ இயக்குநரின் ‘டெத் ரயில்வே’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன், தனது இரண்டாவது படமான ‘டெத் ரயில்வே’ (Death Railway) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளை தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சசிகுமார் இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

1944ஆம் ஆண்டு ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய வரலாற்றுச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. போர்க்களத்தின் தீவிரத்துடன் உணர்வுப்பூர்வமான காதலையும் இணைத்து வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு சர்தக் கல்யாணி இசையமைக்கிறார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘யாத்திசை’ படத்தில் வரலாற்றுக் காட்சிகளைத் தத்ரூபமாக உருவாக்கிய தரணி ராசேந்திரன், தற்போது இன்னும் பிரம்மாண்டமான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார்.

போர், காதல், சுதந்திரப் போராட்டம் எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய ‘டெத் ரயில்வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Facebook Comments

Related Articles

Back to top button