Spotlightவிமர்சனங்கள்

தேஜாவு – விமர்சனம் 2.5/5

றிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “தேஜாவு”. போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அருள்நிதி. எப்போதுமே கதையில் கவனம் செலுத்தும் அருள்நிதி, இக்கதையின் தேர்வு எந்த அளவிற்கு அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்று விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி,

கதாசிரியரான அச்சியுத் குமார், தான் எழுதும் கதை அனைத்தும் நிஜத்தில் நடப்பதாகவும் அதனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

அன்று இரவே, காவல்துறை தலைவரான மது பாலாவின் மகளாக வரும் ஸ்மிருதி வெங்கட் கடத்தப்படுகிறார். இந்த கடத்தல் சம்பவம் கதாசிரியர் எழுதியது போல் நடக்க, போலீஸ் அச்சியுத் குமாரை கைது செய்ய நினைக்கிறது. ஆனால், ஆதாரம் சரிவர இல்லாததால் அவரை கைது செய்ய முடியவில்லை.

அதே சமயம், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக அருள்நிதி நியமிக்கப்பட்டு, வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறார். இறுதியாக ஸ்மிருதி வெங்கட் மீட்கப்பட்டாரா.? கதாசிரியர் எழுதுவது போல் நடக்க என்ன காரணம்.? என்று சில பல ட்விஸ்ட் கலந்து வந்திருக்கும் படம் தான் “தேஜாவு”.

காவல்துறை சிறப்பு அதிகாரியாக வரும் அருள்நிதிக்கு சிறப்பான தோற்றம் தான். தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் அருள்நிதி. மிடுக்கான தோற்றத்தில் ரசிகர்களை தன்வசப்படுத்திருக்கிறார் அருள்நிதி.

சீனியர் நடிகரான அச்சியுத் குமார், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். காட்சிகளில் அவர் தோன்றினாலும், கண்களுக்கு தெரிவது என்னவோ எம் எஸ் பாஸ்கர் தான். அச்சியுத் குமாருக்கு டப்பிங் கொடுத்திருப்பது எம் எஸ் பாஸ்கர்.

படத்திற்கும் கேரக்டருக்கும் சுத்தமாக பொருந்தாத ஒரு கதாபாத்திரமாக வந்திருப்பது சீனியர் நடிகையான மதுபாலா தான். ஓவர் ஆக்டிங்க் கொடுத்து நம்மை சோதனை செய்கிறார். அதிலும், என் கவுண்டர் செய்யும் காட்சிகளில் “ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்ப்பா… ” முடியல..

படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும், அதை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் ஸ்மிருதி வெங்கட். ஆரம்பத்தில் நன்றாக விறுவிறுப்பாக செல்லும் படம், போக போக வேகம் குறைந்து விட்டது.

அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ஒரு சில ட்விஸ்ட் காட்சிகள் “போதும்டா சாமி.. ஆளை விடுங்க”ன்னு சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியதாகி விட்டது.

படத்திற்கு சற்று ஆறுதல் என்றால் அது பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும் தான். இரண்டும் ஒருசேர பயணித்ததால் காட்சிகளை ரசிக்க முடிந்தது.

கதையில் இன்னும் சற்று சுவாரஸ்யத்தை ஏற்றியிருந்தால் கதை படுவேகமாக பயணப்பட்டு நம்மையும் பயணப்பட வைத்திருக்கும்.

தேஜாவு – தேறவில்லை..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close