Spotlightசினிமா

‘ரத்தத்த தா’ பாடல் வைரல்: டிமான்டி காலனி 3 மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்திய சாம் சி எஸ்!

டிமான்டி காலனி 3 முதல் பாடலான ‘ரத்தத்த தா’ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்து, அவரே பாடியுள்ள இந்த பாடல், படத்தின் ஹாரர் உலகை இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரத்தத்த தா’ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

மோகன் ராஜன் எழுதிய வரிகளுக்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரே தனது குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையும், மர்ம உலகின் தீவிரமும் இசையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் முக்கிய வில்லனின் நரக உலகை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், சிவப்பு நிற காட்சியமைப்பு, நரகத்தை நினைவூட்டும் கலை வடிவமைப்பு மற்றும் திகில் நிறைந்த ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. அதற்கு சாம் சி எஸ் அமைத்துள்ள பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் பாடலின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தின் பின்னணி இசைக்காக பாராட்டுகளை பெற்ற சாம் சி எஸ், மூன்றாவது பாகத்திலும் தனது இசை மாயாஜாலத்தை தொடர்ந்துள்ளார். குறிப்பாக ஹாரர் மற்றும் டார்க் தீமை மையமாகக் கொண்ட இசை ரசிகர்களிடையே இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர்-த்ரில்லர் தொடர்களில் ஒன்றாக திகழும் டிமான்டி காலனி தொடரின் மூன்றாவது பாகம் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ‘ரத்தத்த தா’ பாடல் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக இயங்கி வரும் இசையமைப்பாளர் சாம் சி எஸ், தற்போது ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம் மற்றும் ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

‘ரத்தத்த தா’ பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button