Spotlightசினிமா

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் ’தனுஷ்’… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

T .G தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ”பட்டாஸ்”. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திலும் தனுஷே நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் .

தனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுஷுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும் கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் . துருவங்கள் பதினாறு படத்தின் மூலமாக அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்த ஒரு இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குன கார்த்திக் நரேன். தனுஷுடன் இணைவதால், படத்தின் கதை வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தனுஷ் – ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரம் தேவை என்பதன் காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் “தனுஷ் 43 ” அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது .

பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன மற்றும் அசுரனின் வெற்றிக்கு பிறகு GV பிரகாஷ் 5 முறையாக இசையமைப்பாளராக தனுஷுடன் கைகோர்க்கிறார் .

அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button