Spotlightசினிமா

ENPT ரிலீஸ்; கண்டு கொள்ளாமல் வெளிநாடு பறந்து செல்லும் தனுஷ்!

னுஷ் நடிக்க கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்து, இயக்க உருவாகியிருக்கும் படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

பல போராட்டங்களுக்குப் பிறகு, இப்படத்திம் வரும் வெள்ளியன்று (6ஆம் தேதி) வெளியாகும் என சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார் கெளதம் வாசுதேவ் மேனன்.

இப்படத்தினைப் பற்றி இதுவரை எந்த வித அறிவிப்போ, அல்லது போஸ்டரோ என எதையும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததில்லை. இதற்கான காரணம், இப்படத்திற்கான சம்பளம் தனுஷிற்கு இதுவரை கொடுக்கப்படவில்லையாம்.

இதனாலயே, இப்படத்தின் ப்ரொமோஷனில் எதிலும் தனுஷ் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லையாம். அதுமட்டுமல்லாமல், தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இலண்டனில் நடைபெறவிருக்கிறது. இதற்காக தனுஷ் இன்னும் இரண்டு நாட்களில் இலண்டன் செல்லவிருக்கிறாராம். இதனை இப்படத்தின் தயாரிப்பாளரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது, எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகும் தேதியில் தனுஷ் இந்தியாவிலேயே இருக்க வாய்ப்பில்லையாம்…

Facebook Comments

Related Articles

Back to top button