Spotlightசினிமா

20 கோடி பார்வையாளர்களை கடந்த தனுஷின் ‘ரெளடி பேபி”!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது “மாரி 2”.

இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இதில் இடம்பெற்ற “ரெளடி பேபி” என்னும் பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் அந்த பாடல் வெளியான நாளிலிருந்து தற்போது வரை சுமார் 200 மில்லியன் அதாவது 20 கோடி பேர் இந்த பாடலை யூ டியூப் பக்கத்தில் பார்த்துள்ளார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன் தனுஷின் கொலவெறி பாடல் தான் அதிக அளவில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்ட பாடலாக இருந்தது.

இப்போது அவரது சாதனையை அவர் நடித்துள்ள ரளெடி பேபி பாடல் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு வெற்றிக்கு காரணமாக இருந்த நடன இயக்குனர் பிரபுதேவா மற்றும் ஜானி மாஸ்டர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் பாலாஜி மோகன் என அனைவருக்குமே தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார் தனுஷ்.

Facebook Comments

Related Articles

Back to top button