
சந்தானம் நடிக்க கார்த்திக் யோகி இயக்கியிருந்த திரைப்படம் தான் “டிக்கிலோனா”. கடந்த வெள்ளியன்று இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்திருந்தது.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்நிலையில், படத்தில் ஊனமுற்ற கதாபாத்திரம் ஒருவரை ஹீரோ சந்தானம் “ஏய் சைட் ஸ்டாண்டு” என்று அழைப்பார். இது ஒட்டுமொத்த ஊனமுற்றோரையும் கிண்டலடிப்பதாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
ஒரு ஊனமுற்றவரை இப்படி கூறுவதால், நாளடைவில் இளஞ்சிறார்களும் “இப்படி அழைப்பதால் தவறேதும் இல்லை போலும்” என்று நினைத்து, அவர்களும் இப்படி அழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதனால் ஊனமுற்றவர்களுக்கு ஏற்படும் மன வலியை யாரால் தீர்க்க முடியும்.? என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழாமல் இல்லை.
ஆனால், இதுவரை இந்த செயலுக்கு தயாரிப்பு தரப்பான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமோ ஹீரோவான சந்தானமோ ஒரு வருத்தமும் தெரிவிக்காமல் இருப்பது தான் வருத்தத்திலும் வருத்தம்…