Spotlightசினிமா

ராட்சசனை விட தரமான படம் ‘காளிதாஸ்’ – ஆர் கே சுரேஷ்!

றிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடிக்க வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் ‘காளிதாஸ்’.

பத்திரிகைகளால் பெரிதும் வரவேற்கப்பட்டு பாராட்டப்பட்ட திரைப்படம் ‘காளிதாஸ்’. அதுமட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் ‘காளிதாஸ்’ படத்தினை பாராட்டி, குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

’ராட்சசன் படத்தை விட மிகவும் த்ரில்லான ஒரு படமாக இருக்கிறது. அதிலும், க்ளைமாக்ஸ் காட்சிகள் மிரள வைத்துள்ளது.

ஒரு அறிமுக இயக்குனர் இவ்வளவு தரமான படத்தை கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

பரத் மிகவும் அருமையாக நடித்துள்ளார். அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று இப்படத்தை பார்க்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button