குற்றம் 23 படத்தின் மூலம் தேர்ந்த நடிகையாக மாறிய மஹிமா நம்பியார் தொடர்ந்து கொடிவீரன் படத்திலும் நாயகியாக நடித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராஜ்தீப் இயக்கத்தில் ‘அசுரகுரு’ படத்தில் நடித்து வரும் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக மகிமா நம்பியார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த படத்தில் மகிமா காதல், டூயட் பாடும் வழக்கமான கதாநாயகியாக இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மகிமா, ‘புல்லட்’ ஓட்டுதல், வில் வித்தை, மலை ஏற்றம் போன்ற பயிற்சிகளை கடந்த ஒரு மாத காலமாக மேற்கொண்டு வருகிறார்.
அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திகில் படமாக, ‘அசுரகுரு’ தயாராகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த், நாகிநீடு (தெலுங்கு) ஆகியோர் நடிக்கிறார்கள்.
திகில் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கிறார்.