
இயக்குனர் பாலா தனது சினிமா பயணத்தில் இதுவரை 25 படங்களை இயக்கியிருக்கிறார். இவரது 25வது படமாக அமைந்திருக்கிறார் வணங்கான். ந்
இப்படம், அடுத்த மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், வணங்கான் படக்குழு இயக்குனர் பாலாவிற்கு மரியாதை கொடுக்கும் விதமாக ”பாலா 25” என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.
இதன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பாலாவின் படத்தில் இதுவரை நடித்த நடிகர்கள் பாலாவின் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு பாலாவை பற்றி பேசினர்.
இந்நிகழ்வில், நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. நடிகர் விக்ரமிற்கு சேது மற்றும் பிதாமகன் என்று இரு பெரும் ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் பாலா. நேற்றைய நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொள்ளாதது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சமுத்திரக்கனி, பேரரசு, மன்சூர் அலிகான், சிவக்குமார், கஸ்தூரி ராஜா, விஜயகுமார், ஜி வி பிரகாஷ்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.